பிளாக்கரில் லேபிளின் தலைப்புகளை ஒரே பக்கத்தில் வரச்செய்வது எப்படி?

பிளாக்கரில் குறிப்பிட்ட லேபிளில் அடங்கியுள்ள பதிவுகளின் தலைப்புகளையும் ஒரே பக்கத்தில் காட்டுவது எப்படி? (how to show specific label post titles in a page) என்பதைப் பார்ப்போம்.

குறிப்பிட்ட லேபிளின் பதிவுகளின் தலைப்புகளை மட்டும் காட்டுவதால் என்ன பயன் என்று நீங்கள் நினைக்கலாம்.. உங்கள் தளத்திற்கு வரும் வாசகர்கள் ஒரு குறிப்பிட்ட லேபிளை மட்டும் கிளிக் செய்யும்போது அதிலுள்ள பதிவுகள் அனைத்தும் திறக்கும். குறிப்பிட லேபிளின் கீழ் அதிக பதிவுகள் இருந்தால் அந்தப் பக்கம் திறக்க நேரம் எடுத்துக்கொள்ளும். இதைத் தவிர்க்கவும், மேலும் அதிக பதிவுகளை ஒரே பக்கத்தில் காட்டவும் இந்த முறை பயன்படுகிறது.

இணையத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு தளமாக இருந்தாலும் வரும் வாசகர்கள்(readers), பார்வையாளர்கள்(Visitors) அந்த தளம் விரைவாகத் திறப்பதை விரும்புவார்கள்.. ஏன் நாமும் கூட அதையே விரும்புவோம். ஒரு இணைப்பை சொடுக்கியவுடன் அந்தப் பக்கம் விரைவாக திறந்தால்தான் அதிலிருக்கும் கட்டுரைகளை(Articles) முழுவதுமாக படிக்க எண்ணம் வரும்.

ஒரு பக்கமானது திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்போது, அந்தப் பக்கத்தை பார்வையிடாமலேயே அடுத்த பக்கத்திற்கு, அல்லது வேறொரு தளத்திற்கு பார்வையாளர்கள் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவேதான் இத்தகைய யுக்திகளைப்(Tricks) பயன்படுத்தி வாசகர்கள் நிறைய நேரம் நம் தளத்தில் நேரத்தை செலவிட வைக்க முடியும்.

இதனால் உங்களின் உண்மையான பயனுள்ள பதிவுகள் வாசகர்களுக்கு முழுமையாகவும் சென்றடையும்.

சரி.. லேபிளின் தலைப்புகளை ஒரே பக்கத்தில் கொண்டுவருவது(show label post in one page) எப்படி? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

செய்முறை: 

வழக்கம்போல உங்கள் பிளாக்கரில் உள்நுழைந்துகொள்ளுங்கள்.


Template==>Edit Html==>  
இப்போது கீழ்காணும் கோடிங்கை தேடுங்கள்.

கோடிங்கை தேடி பெற்றவுடன், அதை முழுமையாக நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக கீழ்க்காணும் கோடிங்கை காப்பி(Copy) செய்து நீக்கிய நிரல்வரி இருந்த இடத்தில் பேஸ்ட் (Paste) செய்யவும். 

செய்த மாற்றத்தை Save Template கொடுத்து சேமித்துக்கொள்ளவும். இனி நீங்கள் உங்களுடைய லேபிளை கிளிக் செய்து பார்க்கும்போது லேபிளில் அடங்கியுள்ள பதிவுகளின் தலைப்புகள் மட்டும் தெரியும்.

இப்போது கீழ்க்கண்டவாறு உங்கள் பிளாக் லேபின் தலைப்புகள் மட்டும் வரிசையாகத் தோன்றும்.
 DEMO

No comments:

Post a Comment